Untitled 1 34 scaled
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

Share

ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20,000 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.

எனினும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் அதனை குறைக்க திட்டமிட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் கீழ், ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்போர் வழமையான முறைமையின் கீழ், 14 நாட்களுக்குள் தமக்கான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

விசேட சேவை மூலம் இதனை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பவர்கள், கொரியர் சேவை மூலம் மூன்று தினங்களில் இதனைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...

Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...