8 50
இலங்கைசெய்திகள்

வீடுகளைக் கொளுத்தி ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் இல்லை! நாமல்

Share

வீடுகளைக் கொளுத்தி ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் இல்லை! நாமல்

வீடுகளைக் கொளுத்தி அரகலய மூலம் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. ஜனநாயக வழியிலேயே எமது அரசியல் பயணம் தொடரும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எம்மிடம் ஆயுதப் படை இல்லை. வீடுகளைக் கொளுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொன்று அரகலய மூலம் ஆட்சியைப் பிடிக்க மாட்டோம். ஜனநாயக வழியில் எமது பயணம் தொடரும்.

ஆளுங்கட்சியிலுள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களால் பலனில்லை என ஜனாதிபதி கருதினால் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு , நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்ல முடியும்.

எம்மிடம் வேலைத்திட்டம் உள்ளது, தூரநோக்கு சிந்தனை உள்ளது.கடந்த காலங்களில் செயற்பட்ட அனுபவம் உள்ளது.

எனவே, ஜனநாயக வழியில் எந்நேரத்திலும் ஆட்சியைப் பொறுப்பேற்கத் தயார். எந்தக் கட்சியாக இருந்தாலும் இளைஞர்களைப் பொறுப்புடன் வழிநடத்த வேண்டும்.

புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் வகையில் நாம் இளைஞர்களை வழிநடத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...