sumanthiran scaled
செய்திகள்அரசியல்இலங்கை

பாரிய பொருளாதார நெருக்கடியில் இலங்கை! – சுமந்திரன் எச்சரிக்கை

Share

இலங்கை முன்னொருபோதும் கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதன் தாக்கமானது விசேடமாக தொழில் வர்க்கத்தினரையும் வறுமையில் உள்ளவர்களையும் மற்றும் அனைத்து சமூக வர்க்கத்தினையும் பாதித்துள்ளது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சந்தேகத்திற்கிடமின்றி அரசாங்கமானது ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. ஒரு நாட்டு மக்களாக இந்த சவாலினை மேற்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய ஒரு தேவையுள்ளது.

அதேவேளை இந்த நெருக்கடியினை தீர்ப்பதற்கு அரசாங்கம் கையாளும் வழிமுறைகள் மிக முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசாங்கமானது வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதானது எமது மக்களிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் கையிருப்பை இல்லாமற் போக செய்கிறது.

எவ்விதத்திலாயினும் கடன் தவணைகளில் எவ்வித தாமதமும் ஏற்படுவதனை தவிர்க்கும் அரசாங்கத்தின் குறிக்கோளானது எமது மக்கள் உண்ணக்கூடிய சூழலில் இருக்கிறார்களா என்கிற அடைப்படை கேள்வியை குறைத்து மதிப்பிடுவதாகவே அமைகிறது.

ஏனெனில் இறுதியாக ஒரு நாட்டின் பெருமையானது கடன்களை மீள்செலுத்துவதில் மாத்திரம் தங்குவதில்லை மாறாக எந்தவொரு குடிமகனும் பசியோடு தூக்கத்திற்கு செல்லலாம் இருப்பதனை உறுதி செய்வதிலும் தங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு இலங்கை மக்கள் தொடர்பில் எமக்கு இருக்கும் பொறுப்பினை உணர்த்தவர்களாக இலங்கையிலுள்ள ஆறிற்கும் அதிகமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த சூழ்நிலையினை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கடந்த 27ம் திகதி கலந்தாலோசனை ஒன்றினை நடாத்தியிருந்தோம்.

பாராளுமன்றத்தின் பொது நிதி குழுவின் முன்னாள் தலைவர் என்ற வகையில் சக பாராளுமன்ற அங்கத்தவர்களை நான் அணுகியிருந்தேன். கூடி வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிதி தொடர்பில் பாராளுமன்றமானது முழு அதிகாரத்தினையும் கொண்டிருக்க வேண்டும் என்ற தெளிவினையும், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையில் பொது நிதியானது சரியாக பயன்படுத்தப்படுவதனை உறுதி செய்யும் சட்டரீதியான கடப்பாட்டினையும் கொண்டவர்கள் என்பதனை அறிந்தவர்களாகவும் கூடி வந்தனர்.

நாங்கள் கண்டுகொண்ட நெருக்கடியானது பல்வேறு காரணங்களிற்காக வரலாற்றில் என்றும் இல்லாதவறான பாரியதொன்றாகும்.

நாட்டின் தரப்படுத்தலானது சர்வதேச கடன் சந்தையில் கறுப்புப் பட்டியலில் இடம்பெறுமளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து பிணைமுறியை வைத்து சர்வதேச சந்தையில் கடன் இலங்கை கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் அமெரிக்க டொலரில் கடன் மீள்செலுத்துவதானது, பாவனைக்குட்படுத்த கூடிய டொலரின் கையிருப்பானது ஒரு மாதத்திற்கான இறக்குமதிக்கு கூட போதாததொன்றாக வீழ்ச்சி அடைந்துள்ளது – சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெற்ற பாரிய வீழ்ச்சி இதுவாகும்.

அரசாங்கத்தின் வருமானத்திற்கெதிரான கடன் வட்டி வீதமானது 2020ல் 70மூ ஆக இலங்கை வரலாற்றிலே மிக உச்சமாக பதிவு செய்யப்பட்டதுமல்லாமல் உலகத்திலே உச்சமான வீதங்களிலேயும் இடம்பெற்றது ஆகும்.

இலங்கை உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான பொது கடன் சுமையானது 120 வீதமாக ஒரு பாரிய ஏற்றமாக காணப்பட்டது இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 வீதம் உயர்வாகும்.

இந்த ஒவ்வொரு நிலைமைகளும் தனித்தனியாக பாரிய பொருளாதார பிரச்சினைகளை எடுத்துக்காட்டும். இவை சேர்ந்து இடம்பெறுவதானது எமது எதிர்காலத்திற்கு குறுகிய மற்றும் நீண்டகால அச்சுறுத்தலினை ஏற்படுத்துகின்றது

இந்த பின்னணியில் கடன் கொடுத்தவர்களிற்கு முழுமையாகவும் சரியான நேரத்திலும் கடனை செலுத்துவதற்காக டொலரை தேக்கி வைக்கும் கொள்கையை மத்திய வங்கி கடைப் பிடிக்கின்றது. இது எமது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு தேவையான டொலரின் பற்றாக்குறைக்கு மேலும் வலு சேர்ப்பதாகவும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியை குறைந்ததுமுள்ளது.

இந்த பற்றாக்குறையின் எதிரொலியினை அத்தியாவசிய பொருட்களிற்கான நீண்ட வரிசைகளிலும் தொடர் மின் துண்டிப்பிலும் நாம் கண்டோம். அரசாங்கமானது டொலர் கையிருப்பினை உறுதி செய்யும் வகையில் மாற்று வழிமுறைகளை கையாளவில்லை என்றால் இந்த நிலைமை மேலும் மோசமடையும்.

ஏற்கனவே அரசாங்கத்தின் இரசாயன உர கொள்கையின் நிமித்தம் விவசாயிகள் பாரிய பாதிப்பினை சந்த்தித்துள்ளதோடு, ஒரு உணவு பற்றாக்குறைக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டிய சூழலை எதிர்நோக்கியுள்ளோம். அரசாங்த்தின் ஆழ்ந்த சிந்தனையற்ற நடைமுறை சாத்தியமும் நிலையற்றதுமான தற்போதைய கடன் முகாமைத்துவ கொள்கையானது இரசாயன கொள்கை போன்று பிரச்சினையை மேலும் மும்முரமாக்குகிறது

எமது சந்திப்பானது அரசியல் தலைவர்கள் தமது தொகுதியிலுள்ள கருத்த்துக்களி பகிர்ந்து கொள்வதற்கும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கும் உதவியாக அமைந்தது.

முழுமையாக கடன் தவணைகளை மீள் செலுத்துவதற்கு டொலரினை தேக்கி வைத்திருக்கும் மத்திய வங்கியின் கொள்கையானது, உள்நாட்டில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர் கையிருப்பை குறைகின்றது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலைமையானது பாரிய பொருளாதார தாக்கங்களை இலங்கை மக்கள் மத்தியில் கொண்டுவருவதோடு நீண்டகால பொருளாதார பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. ஆனால் மறுபுறம் இலங்கையின் பிணை முறி வைத்திருப்பாளர்களுக்கு இது பாரிய இலாபத்தினை கொடுக்கிறது.

இலங்கை இந்த பொருளாதார நெருக்கடியின் பாதக விளைவிலிருந்து வறிய மக்களை பாதுகாப்பதற்கான உடனடி வழிமுறைகளை கையாள வேண்டுமென நாங்கள் உடன்பட்டோம். இதிலே பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்கும் நிலையான தீர்வுகளை கண்டடைவதற்குமான தேசிய பொருளாதார கொள்கைகளில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என இணங்கினோம்.

இந்த அரசியல் தலைவர்கள் குழுவானது, இலங்கை மக்களுக்கு நிலையன தீர்வுகள் ஊடாக நீதியை நிலை நாட்டுவதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து இணைந்து செயலாற்ற இணங்கினோம்.

நாங்கள் வரலாறு காணாத இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காக வழிகாட்டுவதோடு எமது எதிர்கால சந்ததிக்கு சமத்துவமானதும் நீதியானதுமான ஒரு எதிர்காலத்தினை உருவாக்கவும் வேண்டும். – என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...