tamilnaadi 3 scaled
இலங்கைசெய்திகள்

கிழக்கை மீட்க வந்தவர்கள் திசை தெரியாது செயல்படுகின்றனர்

Share

கிழக்கை மீட்க வந்தவர்கள் இப்போது கிழக்கு எந்த திசையில் இருக்கின்றது என்று தெரியாதபடி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய காலகட்டத்தில் பேசு பொருளாக இருக்கின்ற முக்கியமான விடயம் வரி விதிப்பு முறையே.

அதைவிட மின்சார சபையை தனியார் மையப்படுத்துகின்ற விடயம் தொடர்பாகவும் பேசுகின்றார்கள்.

எந்த விடயமாக இருந்தாலும் இது ஒரு ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்ற, மக்களாட்சி நடைபெறுகின்ற நாடு என்கின்ற வகையில் மக்களுக்கு சார்பாக அந்த தீர்மானங்கள் இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

இல்லை என்றால் எதிர்வரும் தேர்தல்களில் அவர்கள் தக்க பாடங்களை புகட்டுவார்கள் என்பதில் எதுவிதமான கருத்து வேறுபாடு இல்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். ஆனால் தை பிறந்ததும் பதினைந்து வீதமாக இருந்த வற் வரி 18 விதமாக அதிகரித்திருக்கின்றது.

அத்தோடு இந்த வரியின் பொருட்களின் பட்டியலும் நீண்டு கொண்டு செல்கின்றது. எனவே மக்கள் இந்த வருடத்தில் ஏதாவது அரசாங்கம் தங்களுக்கு ஒரு வருட ரீதியான பரிசு தரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற போது இப்போது அவர்கள் வரிகளை தந்திருக்கின்றார்கள்.” என்றார்.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...