குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தி குறித்த கூடுகளைப் பயன்படுத்தி குரங்குளை பிடிப்பதற்காக விசேட பயற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிர்களை சேதப்படுத்தும் குரங்களை அகற்றும் பணிகளுக்கு அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.
வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், அவற்றுக்கு உணவளிப்பதற்கு ஏதுவாக அனைத்து பயிர் நிலங்களிலும் அரை ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என விலங்கு நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
#srilankaNews
Leave a comment