rtjy 29 scaled
இலங்கைசெய்திகள்

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் தொடர்பில் தகவல்

Share

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் தொடர்பில் தகவல்

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பது தொடர்பான சுற்றறிக்கையை நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக முன்வைப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

60 வயது நிரம்பிய வைத்திய நிபுணர்களுக்கு கட்டாய ஓய்வை வழங்குவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி 176 வைத்திய நிபுணர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம்.சி.பி.எஸ்.மோரோயஸ் ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சுகாதார அமைச்சரினால் வெளியிடப்படும் சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மனுவொன்றின் மூலம் நீதிமன்றில் முன்வைக்கப்படும் எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...