ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
முற்பகல் 11.45 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என தெரியவருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு, தீர்ககமான முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வாராந்தம் திங்கட்கிழமையே அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். அண்மைய நாட்களாக அதற்கு மேலதிகமாக விசேட கூட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment