கதிர்காம கந்தன் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினரால் யாழ்ப்பாணத்திலிருந்து விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளது.
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பாகி இடம்பெறும் நிலையில்இலங்கை போக்குவரத்து சபையினரால் யாழில்இருந்து கதிர்காம கந்தன்ஆலயத்திற்கான விசேட பேருந்து சேவை எதிர்வரும் 12 ம் திகதி வரை இடம் பெற உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை முகாமையாளர் குணசீலன் தெரிவித்தார்.
எதிர்வரும் 12 ம் திகதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 5 .15 மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்படும் எனவும் கதிர்காமம்செல்ல விரும்பும் பக்தர்கள் குறித்த பேருந்து சேவையினை பயன்படுத்துமாறும் அறிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment