images 1
இலங்கைசெய்திகள்

இலங்கையிலும் ஓமிக்ரான் துணை வகைகள்! கோவிட் தொற்று தொடர்பில் விசேட அறிவிப்பு

Share

தற்போது ஆசியாவின் சில பகுதிகளில் பரவி வரும் இரண்டு புதிய ஓமிக்ரான் துணை வகைகளான எல்எப்.7 மற்றும் என்பி.1.8 என்பன இலங்கையிலும் இருப்பதை, இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் வைரஸ் தொடர்பான நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ நிபுணருமாக ஜூட் ஜெயமஹா, இதனை அறிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த துணை வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் தேவையற்ற எச்சரிக்கை அவசியமில்லை என்று ஜெயமஹா வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 வைரஸின் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மூலம் சுகாதாரத் துறை விழிப்புடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முகக்கவசங்கi அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய முன்னேற்றத்தில், காலி தேசிய மருத்துவமனையில் அண்மையில் மரணமான, ஒன்றரை மாதக் குழந்தை ஒன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டது என்று மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த திரிபு தற்போது ஆசியாவில் பரவி வரும் புதிய துணை வகைகளில் ஒன்றாக அடையாளம் காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...