1
இலங்கைசெய்திகள்

யாழில் ஆட்சியை கைப்பற்றவுள்ள தேசிய மக்கள் சக்தி : சந்திரசேகர் பகிரங்கம்

Share

யாழ்.மாவட்டத்தின் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் அதேவேளை, மேலும் சில சபைகளில் எதிர்க்கட்சி தலைவராகக்கூட சிறப்பாக செயற்பட முடியும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு கலந்து கொண்டு உரையாறறும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அவரை அரசாங்கம் கைது செய்யவில்லை. இது விடயத்தில் உடனடியாக தலையிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் எனவும், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்ககூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் இந்நாடு கட்டியெழுப்படாவிட்டால் இலங்கைக்கு விமோசனம் கிடையாது என்பதே புலம்பெயர் தமிழர்களின் கருத்தாக உள்ளது.

தீய குணம் படைத்த – தீய நோக்கத்துடன் செயற்படும அரசியல் சக்திகள் உள்ளன. அந்த தீய சக்திகளை சுத்தப்படுத்த வேண்டும். அதனை நாம் செய்ய வேண்டும்.

அந்தவகையில், உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...