images 3
இலங்கைசெய்திகள்

இந்தியாவில் தீவிரமடையும் கோவிட் தொற்று! வேகமாக அதிகரிக்கும் நோயாளர்கள்

Share

இந்தியாவில் கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கோவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் 1,147 பேரும் மகாராஷ்ட்ராவில் 424 பேரும் டெல்லியில் 294 பேரும் தமிழகத்தில் 148 பேரும் குஜராத்தில் 223 பேரும் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை இந்தியாவில் 07 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

தொற்றுநிலை மீண்டும் உயரும் நிலையில், பல மாநிலங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி, மற்றும் தடுப்பூசி தொடர்பான நடைமுறைகள் மீண்டும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட் 19 மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுவதாவது, “கோவிட் 19 இன்னும் முழுமையாக நீங்கவில்லை. மக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் தொற்றை கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் ஜூன் 30 முதல் தண்ணீர்க் கட்டணத் திருத்தம்: அமைச்சர் சுசில் ரணசிங்க தகவல்

இலங்கையில் தண்ணீர்க் கட்டணங்களின் அடுத்தக்கட்ட திருத்தம் வரும் ஜூன் மாதம் 30-ம் திகதி மேற்கொள்ளப்படும் என...

world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...