20220426 111325 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு புதிது அல்ல! – அமெரிக்க தூதரிடம் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

Share

இராணுவத்தினர் பலவிதமான பொருளாதார நடவடிக்கைகளில் அங்கு மக்களுக்கு நன்மை பயக்காத முறையில் தமக்கு நன்மை பயக்கும் விதத்தில் செயற்படுகின்றார்கள் என்ற விடயத்தை அமெரிக்க தூதருக்கு எடுத்து கூறியதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்திருக்கலாம். ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை மட்டும் அழைத்திருக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் இணைந்து பேச்சினை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் ஏதாவது நன்மை தீமைகள் பெற்றுள்ளீர்களா என்ற அடிப்படையில் சில கேள்விகள் அமெரிக்க தூதரால் எழுப்பப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி உத்தரவாதம் தந்தால் அதை கட்டாயம் செய்வார் என்ற அடிப்படையில் சித்தார்த்தன் தனது கருத்தை தெரிவித்தார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது என்றால் இதனை செய்திருக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்காமல் விட்டுவிட்டு காலக்கிரமத்தில் செய்வோம் என்பதில் அர்த்தமில்லை.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தற்போதைய நிலைமைகள், பொருளாதார நிலைமை பிரச்சனைகளுக்கு பிறகு தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்குரிய பதில்களை நாங்கள் கூறியிருந்தோம்.

30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் எவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொண்டார்களோ அதே போலவே தற்போது தென்னிலங்கையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இது தமிழ் மக்களுக்கு புதிய அனுபவம் அல்ல. நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடியிலும் இருப்பதை மக்கள் கஷ்டமான நிலையில் வசிப்பதையும் அவருக்கு தெரிவித்த தெரியப்படுத்தினோம்.

இலங்கை மக்களுக்கு அமெரிக்கா செய்யக்கூடிய உதவிகளை செய்வோம் என அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். இதைவிட இராணுவம் சம்பந்தமான பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண குடாநாட்டில் பல ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கைவசம் வைத்திருப்பது சம்பந்தமாகவும் கேட்கப்பட்டது. இவற்றை வைத்துக்கொண்டு இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வியை அவர் கேட்டிருந்தார்.

பலவிதமான பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தினர் அங்கு மக்களுக்கு நன்மை பயக்காத முறையில் தமக்கு நன்மை பயக்கும் விதத்தில் செயற்படுகின்றார்கள் என்ற விடயத்தை எடுத்துக் கூறினோம்.

தமிழ் மக்கள் காணிகள் பறிக்கப்படுவது சம்பந்தமாகவும் பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.பொதுவாக அமெரிக்க தூதுவர் தமிழ் மக்கள் சம்பந்தமான பிரச்சினைகள், என்னென்ன தேவையாக இருக்கின்றது என கேட்டறிந்து கொண்டார் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...