கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில் நடுவீதியில் நபர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்து கொண்டுள்ளார்.
கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றின் முன்பாக இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ வைத்துக்கொண்ட நபர் யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரை யார் என உறுதிப்படுத்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தீக்காயங்களுக்கு உள்ளான நபரின் உடல்நிலை முன்னேற்றம் காணப்படுகிறது எனவும் குறித்த நபர் எதற்காக தீவைத்துக் கொண்டார் என எனவும் இதுவரை தெரியவில்லை என கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment