5 39
இலங்கைசெய்திகள்

அரசியலுக்கு விடைகொடுக்க முன்னாள் பெரும்பான்மை எம்.பிக்கள் சிலர் திட்டம்!

Share

அரசியலுக்கு விடைகொடுக்க முன்னாள் பெரும்பான்மை எம்.பிக்கள் சிலர் திட்டம்!

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க முன்னாள் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்திக்கான வெற்றி வாய்ப்பு தமது மாவட்டத்தில் அதிகம் என்பதால், போட்டியிட்டாலும் தோல்வி ஏற்படும் எனக் கருதும் சில பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களே, தேர்தலில் இருந்து ஒதுங்குவதற்கு முடிவெடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பக்கம் நின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சஜித் அணியும் கதவடைப்பு செய்துள்ளதால் ஒரு சில அரசியல்வாதிகளின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...

நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி!

இன்றைய தினம், எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....