1 14
அரசியல்இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்க தயாராகும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள்

Share

இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்க தயாராகும் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள்

ஆளும் கட்சியில் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்து வரும் மொட்டு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காத தரப்பினர் இவ்வாறு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி.வீ.சானக்க, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்ச, அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத் ஆகியோர் இவ்வாறு தங்களது இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது அமைச்சு பதவிகளை வகிப்பது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.i89

இதேவேளை, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...