14 30
இலங்கைசெய்திகள்

2025ஆம் ஆண்டில் கட்சியை மறுசீரமைக்க தயாராகும் மொட்டு தரப்பு

Share

2025ஆம் ஆண்டில் கட்சியை மறுசீரமைக்க தயாராகும் மொட்டு தரப்பு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சியை பலப்படுத்தவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோரின் தலைமையில் மேலும் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் கட்சி வீழ்ச்சியடைந்த போதிலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியில் சில புத்துணர்ச்சி காணப்பட்டதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை புதிய பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், கட்சியை தனிப் பிரதான கட்சியாக எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்துவதற்கும் அடிமட்ட மற்றும் கிராம மட்டத்தில் உள்ள உறுப்பினர்களை தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி வீழ்ச்சியடைந்த போது கட்சியை விட்டு வெளியேறாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் மீள்சேர்க்கப்படவுள்ளதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...