32 8
இலங்கைசெய்திகள்

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : அதிருப்தியில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்

Share

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : அதிருப்தியில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் மைதானத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பந்து பரிமாற்றம் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, சர்ச்சைக்குரிய பந்து மாற்றம் வர்ணனையாளர்கள் மற்றும் வீரர்களிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

41வது ஓவருக்குப் பின்னர், இங்கிலாந்து அணியினரின் தேய்ந்துபோன பந்தை மாற்றுவதற்கான கோரிக்கையை நடுவர் ஏற்றுக்கொண்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட், இது ஒரு மோசமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி 24 ஓட்டங்கள்; முன்னிலையுடன் 4 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்திருந்தபோது சர்ச்சைக்குரிய பந்து பரிமாற்றம் நடந்தது,

குறித்த நேரத்தில் பந்து பரிமாற்றம் கோரப்பட்டபோது, அதேபோன்ற தேய்ந்த பந்தே பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

எனினும் புதிய பந்தை நடுவர்கள் அனுமதித்தனர். இதன் காரணமாகவே இலங்கை அணியின் விக்கட்டுக்கள் இழக்கப்பட்டதாக பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...