32 6
இலங்கைசெய்திகள்

சுமந்திரனின் எடுபிடியாக செயற்படும் சாணக்கியன்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

Share

சுமந்திரனின் எடுபிடியாக செயற்படும் சாணக்கியன்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

சுய நிர்ணய உரிமை என்றால் என்ன? சுய நிர்ணய உரிமையை எப்படி பாவிப்பது? என்பதை பற்றி சுமந்திரனின் எடுபிடியக செயற்படும் சாணக்கியனிடம் கேட்க விரும்புகிறேன் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் தங்களது தலைவிதி எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பதே பொதுமக்கள் வாக்கெடுப்பு.

சாணக்கியனுக்கு தற்போது 60 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதை விட மேலாலும் கீழாலும் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் ஆரம்பிக்கும் போது இவர்களால் முடியாது என்று கூறப்பட்டது.

முப்படைகளையும் கொண்டு வந்து, ஒரு நடைமுறை அரசாங்கத்தை கட்டி எழுப்பி, இன்று சர்வதேச ரீதியில் கொண்டுவரக் கூடிய அளவிற்கு போராட்டம் வளர்ந்தது.

அதுபோலத்தான் ஆரம்பத்தில் முடியாது என்று தான் எல்லாரும் சொல்லுவார்கள். அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் சரி வராது.

இனப்படுகொலை இடம்பெற்றது, சர்வதேச நீதி வேண்டும் என்ற கோரிக்கையை இன்று எத்தனையோ நாட்டு பிரதமர்கள் பேசும் அளவிற்கு வந்திருக்கின்றார்கள்.

அமெரிக்கா காங்கிரஸிலேயே ஒரு சுதந்திரத்துக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு வேண்டும் என்று 10 பேருடன் ஒரு தீர்மானம் வந்திருக்கிறது. அந்தத் தீர்மானம் நிறைவேறும் என்பதற்கு அனுசரணையாகவும் சாதகமாகவும் செயல்பட வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...