3 12
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சி மீள நிமிரும் : சிறீதரன் நம்பிக்கை

Share

தமிழரசுக் கட்சி மீள நிமிரும் : சிறீதரன் நம்பிக்கை

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில்,  இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான் எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சிவஞானம் சிறீதரனை ஆதரித்து, வன்னேரிக்குளம் வட்டாரத்தில் பிரச்சாரக் கூட்டமொன்று நேற்றைய தினம் (06) இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரை காலமும் தமிழ் மக்களின் அரசியல் வெறுமையின் வடிகாலாக, தமிழ்த்தேசிய அடையாளமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இருந்து வந்ததைப் போலவே உட்கட்சி விரிசல்களை சீரமைத்து எமது மக்களின் அரசியல் அடையாளமாக கட்சியை மீளக்கட்டியெழுப்பும் காலப் பணி எமக்கிருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அத்தகைய பணிகளை நாம் ஆற்றுவதற்கு, எதிர்வரும் தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கப் போகும் ஆணையே உந்துசக்தியாக மாறும்.

இதனை உணர்ந்த எமது மக்களின் தெரிவுகள் அரசியல் அறம் சார்ந்தும் மற்றும் தமிழ்த்தேசியக் கொள்கை சார்ந்துமே அமையும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...