varna scaled
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழீழ எழுச்சிப் பாடகர் வர்ணராமேஸ்வரன் காலமானார்

Share

மாவீரர் நாளில்  துயிலுமில்லங்களில் ஒலிக்கப்படும் ‘தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே…’ எனும் உணர்ச்சிகரமான பாடல்  உட்பட பல பாடல்களை பாடிய சங்கீத, மிருதங்க கலாவித்தகர், இசைக் கலைமாமணி வர்ணராமேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

இவர் இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் இசைக்கலைஞராக விளங்கியுள்ளதோடு பல நிகழ்ச்சிகளுக்கும் இசை அமைத்துமுள்ளார்.

போர்ச் சூழல் காரணமாக கனடாவில் புலம்பெயர்ந்து குடியேறிய இவர் அங்கு தமிழிசை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு பல பகுதிகளிலும் இசை வகுப்புக்களையும் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று கனடாவில் காலமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரது தமிழீழ தாயகப் பாடல்கள் சாகா வரம் பெற்று இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...