செய்திகள்இலங்கை

இந்திய இசை நிகழ்வில் பாடுகிறார் இளம் பாடகி யொஹானி!

yohani 720x375 1
Share

மெனிக்கே மகே ஹித்தே பாடலின் மூலமாக உலகளவில் பிரபல்யமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நடைபெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம் திகதி மற்றும் ஒக்டோபர் 03 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம் திகதி இந்தியாவின் புதுடெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானா குருகிராம் நகரிலுள்ள ‘ஸ்டூடியோ எக்ஸ்ஓ’ அரங்கத்திலும், அக்டோபர் 3ம் திகதி ஹைதராபாத் நகரிலுள்ள ‘ ஹார்ட் கப் கொஃபி’ அரங்கிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யொஹானி டி சில்வா இந்தியாவில் பங்குபற்றவுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு ‘ Supermoon #NowTrending’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

யொஹானியின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இது குறித்து யொஹானி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,

‘இந்தியாவில் பாட வேண்டுமென நான் எப்போதும் விரும்பியிருந்தேன். இறுதியில் அது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு கிடைத்த அதிஸ்டம்’ என கூறியுள்ளார் .

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....