சத்தமின்றி அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10% முதல் 12% வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அதற்கிணங்க இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 30 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்..
பொதுமக்கள் நடைமுறையில் உள்ள சட்ட நியதிகளை பின்பற்றி முகக் கவசத்தை அணிதல்உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை 50 வீத மக்கள் மட்டுமே இதுவரை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் 60 வயதிற்கு மேற்பட்ட 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த தடுப்பூசியை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இதுவரை முதலாவது தடுப்பூசியைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment