Medicines
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

Share
நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகளின் கையிருப்பு தீர்ந்துவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையின் கீழ், தேசிய வைத்தியசாலை முதல் கிராமிய வைத்தியசாலைகள் வரையிலான முழு வைத்தியசாலை அமைப்பின் சுகாதார சேவைகளைப் பராமரிப்பது பாரிய சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய கடன் உதவி முறையின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்படும் 80% மருந்துகள் பதிவு செய்யப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கு மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவெ பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...