Medicines
இலங்கைசெய்திகள்

150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

Share
நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின், மெட்ஃபோர்மின், இதய நோயாளிகளுக்கான அஸ்பிரின்,  குழந்தைகளுக்கான சிரப், மயக்க மருந்து மற்றும் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

1, 300 அத்தியாவசிய மருந்துகளில் 140 முதல் 150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு ஜனவரி இறுதிக்குள் தீர்ந்துவிட்டதாகவும் அந்த மருந்துகளை பிரதியீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், சில வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் மருந்துப் பற்றாக்குறையால் சத்திரசிகிச்சைகள் சில இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்காமையால், பல வைத்தியசாலைகளில் மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் மருத்துவக் களஞ்சியங்களிலும் மாகாணப் பகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பொருட்கள் மட்டுமே இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் மருத்துவ சங்கங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...