கிளிநொச்சியில் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டுள்ளன
கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் புத்தாண்டு அன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
மற்றொரு இளைஞன் படுகாயமடைந்தார். இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று (03) அனைத்து கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.
இச் சம்பவம் புத்தாண்டு தினத்தன்று இரவு 7.30 மணியளவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பரந்தன் சந்திக்கருகில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பரந்தன் பகுதியைச் சேர்ந்த கார்திக் வயது 24 என்பவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது அக்காவின் மகன் காயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் படுகாயமடைந்த இளைஞன் தெரிவித்திருந்ததாவது,
கார்திக்கை நான்கு பேர் கொண்ட குழுவினர் தலைக் கவசத்தினால் தாக்கினர். அப்போது நான் அதனைத் தடுக்க சென்றேன். என்னையும் அவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டியதனால் தான் காயமடைந்தாகவும், தெரிவித்திருந்தார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment