karai
இலங்கைசெய்திகள்

இலங்கை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து!

Share

இலங்கை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து!

இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பில்
பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில், அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

காரைக்கால் மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் சுற்றுலா, மருத்துவம் மற்றும் வணிகம் போன்ற துறைகள் அபிவிருத்தியடையும். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் அதிகரிக்கும்.

மேலும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீனவா்களிடம் ஒப்படைக்கக் கோரியும், கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் மற்றும் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி மேம்பாடு, கூட்டு முயற்சிகள், மற்றும் விவசாயம், கைத்தொழில் சார் முதலீடு மற்றும் கால்நடை துறைசார் மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...