மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது 72 ஆவது வயதில் திருகோணமலையில் காலமாகியுள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் செயற்பட்டவர். இலக்கியத்துறை மற்றும் சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டவர்.
1967 ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் தடம்பதித்து கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக் கட்டுரை என தனது பல ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரின் சிறுகதை இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
அத்துடன் இவரின் படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
மேலும் இவர் கலாபூசணம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment