பெண்கள் குளிப்பதை ரகசியமாக படமெடுக்கும் மட்டக்களப்பு அரசியல்வாதிகள்!
இலங்கைசெய்திகள்

பெண்கள் குளிப்பதை ரகசியமாக படமெடுக்கும் மட்டக்களப்பு அரசியல்வாதிகள்!

Share

பெண்கள் குளிப்பதை ரகசியமாக படமெடுக்கும் மட்டக்களப்பு அரசியல்வாதிகள்!

மட்டக்களப்பில் பெண்கள் குளிப்பதை Drone கமரா மூலம் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் காணொளி எடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றசாட்டினை முன்வைத்துள்ளனர்.

காணிக்கொள்ளை, மணல் கொள்ளைகளை தொடர்ந்து இவ்வாறான ஈனமான செயல்களிலும் ஆளும் நாடளுமன்ற உறுப்பினர்களின் கட்சியை சேர்ந்த சகாக்கள் இவ்வாறான கேவலமான செயலில் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இரா. சாணக்கியன் பார்வையிட்டார்.

அங்குள்ளவர்களே கீரியோடை வாவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் கமராவை வைத்து பார்க்கும் அளவிற்கு மோசமான செயலை இப்போது தான் முதல் முதலாக பார்க்கிறேன் என சாணக்கியன் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் மற்றும் சுற்று சூழல் அதிகாரிகளுடன் உரையாடிய போது ஆற்றில் மீன் வளர்ப்பதற்கு ஒருவர் அனுமதி எடுத்துள்ளதுடன் அவர் கனடாவிற்கு சென்றுள்ளார்.

அந்த நன்னீர் மீன் திட்டத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வருவதாகவும் , வாவியை நம்பி வயிற்றுப் பசிக்காக இறால், மீன்களைப் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை போக்கியவர்கள் அந்த நபர்களால் தாக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த வாவியில் மீன்பிடித்த ஒருவரை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் வீடு திரும்பி உள்ள வேலையில் அவ்விடத்தில் யாரும் மீன் பிடிக்ககூடாது என்று பதாதை இடப்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் மிகவும் பாரதூரமான செயற்பாடுகளாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

அதுமட்டுமின்றி சிசிரிவி கமரா மற்றும் ட்ரோன் போன்றவற்றை பயன்படுத்தி வீடியோக்கள் எடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆற்றினை மறைத்து கூடாரம் அமைத்து மீன் வளர்ப்பதாக கூறி பெண்கள் குளிக்கும் போது சிசிரிவி கமரா மூலம் அதை அவர்கள் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு செயற்பாட்டை உலகத்திலேயே யாரும் செய்யவில்லை என்றும் இது போன்ற மோசமான நடவடிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஈடுபடுகின்றதாகவும் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...