tamilni 245 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் நான்கு உணவகங்களுக்கு பூட்டு

Share

யாழில் நான்கு உணவகங்களுக்கு பூட்டு

யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நான்கு உணவகங்கள் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளன.

யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஏற்கனவே பல தடவைகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையிலும் 03 உணவகங்கள், ஓர் பேக்கரி என்பன சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியநிலையில் பொது சுகாதார பரிசோதகரிடம் சிக்கின.

இதனையடுத்து 03 உணவகங்கள், மற்றும் பேக்கரி என்பவற்றிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் தனித்தனியே வழக்குகள் பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குகளை விசாரித்த மேலதிக நீதவான் சுகாதார சீர்கேடுகள் திருத்தம் செய்யும் வரை 04 உணவு கையாளும் நிலையங்களையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளையிட்டார்.

அத்துடன் வழக்குகளை மேலதிக விசாரணைகளிற்காக டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்தார். இதனைத்தொடர்ந்து 04 உணவு கையாளும் நிலையங்களும் பொது சுகாதார பரிசோதகரால் சீல் வைத்து மூடப்பட்டன.

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...