india sri lanka flags
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாயாவிடமிருந்து பாடப் புத்தகங்கள்

Share

இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதனை பயன்படுத்தி, இந்த ஆண்டுக்கு தேவையான மொத்த பாடப்புத்தகங்களில் பாதியை அச்சிட முடிந்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு, இலங்கை நிதி நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை உதவித் தொகையாக வழங்கியது.

உணவு, எரிபொருள், மருந்துகள், தொழிற்சாலை மூலப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இந்தியா கடந்த மார்ச் மாதம் இந்த உதவியை வழங்கியது.

பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான அச்சு காகிதம் மற்றும் மூலப்பொருட்களை பெறுவதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி தொகையில் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் உள்ள 40 இலட்சம் பாடசாலை மாணவர்களில் சுமார் 45 வீதமான மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு இந்த மானியம் உதவியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 6
இலங்கைஅரசியல்செய்திகள்

இலங்கையை மோதல் களமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக விமல் வீரவன்ச சந்தேகம்: கொழும்பில் ஊடக சந்திப்பு!

ஈரான் போர்க்கப்பல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கையை...

11 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து: தீயணைப்புப் படையினர் விரைந்து நடவடிக்கை

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்று (மார்ச் 7) மதியம்...

12 6
செய்திகள்உலகம்

ஈரான் சரணடைந்துவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக ஈரான்...

13 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பு: அமெரிக்கக் கடற்படையின் தலையீடு குறித்து ஈரான் கடும் எதிர்ப்பு!

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் ஹார்முஸ்...