எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்தார்.
மேலும்,இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு அரசாங்கம் அண்மைக்காலமாக விதித்துள்ள கட்டுப்பாடுகளினால் நுகர்வோரும் தாங்களும் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
தொலைபேசி உதிரிபாகங்களை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதால், தற்போதுள்ள தொலைபேசியை பழுதுபார்ப்பதற்கு வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment