tamilni 449 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் தகவல்

Share

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் தகவல்

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இறுதிக்கிரியைகள் இன்று (28) இடம்பெறவுள்ளது.

புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் இறுதி அஞ்சலியைத் தொடர்ந்து புத்தளம் ராஜகடலுவ கத்தோலிக்க மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியான 28 வயதான பிரபாத் எரங்க பொலிஸ் காவலில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
pers
இலங்கை

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் – மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு மறுஅறிவித்தல் வரை...

school closd
இலங்கை

தொடரும் சீரற்ற காலநிலை – பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், நாளைய தினம், கண்டி மாவட்டத்தின்...

hgfn
இலங்கை

வெள்ள அபாயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த...

vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...