ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சாகல ரத்னாயக்க, அகிலவிராஜ் காரியவசம், ருவன் விஜேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து, வெற்றிடமாகியுள்ள ஐதேக வின் வெற்றிடத்துக்கே இவர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த மூவரில் சாகல ரத்னாயக்க அல்லது ருவன் விஜேவர்தன ஆகிய இருவருள் ஒருவருக்கு தேசிய பட்டியல் உறுப்பினர் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
#SriLankaNews
Leave a comment