கோட்டா சஜித்
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுக்குச் சஜித் மீண்டும் கடிதம்!

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பிரதமர் பதவியைத் தாம் பொறுப்பேற்கத் தயாராகவுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவரால் நேற்றுமுன்தினம் (12) ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும், ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிப்பதற்கான தனது தீர்மானத்தை ஒருபோதும் மாற்றப்போவதில்லை என ஜனாதிபதி பதில் கடிதம் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்குப் பதில் வழங்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒரு கடிதத்தை ஜனாதிபதிக்கு நேற்று (13) அனுப்பியுள்ளார்.

இதில், பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகத் தாம் நேற்றைய நாளில் முதன்முதலாக அறிவித்ததாக ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை முற்றிலும் தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோது தாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை என்றும், ஜனாதிபதியின் அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாகத் தான் தெரிவித்திருந்ததாகவும் சஜித் பிரேமதாஸ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...