21 3
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: கைதானவர்கள் விளக்கமறியலில்

Share

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு மாணவர்களும் நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு இன்று (05) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மஹரகம, எம்பிலிப்பிட்டிய, வாரியபொல மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தின் பகிடிவதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...