24 6614b74226e2a
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தலைமறைவாகியிருந்த ரஸ்ய பெண்ணுக்கு கடுங்காவல் தண்டனை

Share

இலங்கையில் தலைமறைவாகியிருந்த ரஸ்ய பெண்ணுக்கு கடுங்காவல் தண்டனை

இலங்கையில் தலைமறைவாகி இருந்த ரஸ்ய பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு ரஸ்யாவில் (Russia) பத்து மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவை சேர்ந்த அலெனா அகபோனோவா (Alena Agafonova) எனப்படும் 23 வயதான பெண் ஊடகவியலாளர் ரஸ்யாவின் புகழ்பெற்ற போர் சிலையின் மார்பகத்தை கொச்சைப்படுத்தியதன் குற்றத்திற்காகவே இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இந்த பெண், கடந்த ஆண்டு தென்மேற்கு ரஸ்யாவில் உள்ள ‘தாய்நாடு அழைக்கிறது’ (The Motherland Calls) எனப்படும் நினைவுச்சின்னம் குறித்த காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில், அவர் சிலையின் மார்பகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.

இதன் பின்னர், அலெனா அகபோனோவா தமது காணொளியை வெளியிட்ட உடனேயே இலங்கையில் தலைமறைவானார்.

அவர் ரஸ்யாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கடந்த பெப்ரவரி மாதத்தில் தனது தாய்நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

சுமார் 279 அடி உயரத்தில் ஒரு பெண்ணின் வாளைக் காட்டி இந்த நிற்கும் சிலையானது, இரண்டாம் உலகப் போரின் மிகவும் காவியமான போர்களில் ஒன்றான “ஸ்டாலின்கிராட் போரின் ஹீரோக்கள்” நினைவாக உள்ளது.

இது 1967இல் உலகின் மிக உயரமான சிலையாக அறிவிக்கப்பட்டதுடன் ஆசியாவிற்கு வெளியே கிழக்கு அரைக்கோளத்தில் உள்ள மிக உயரமான சிலை ஆகும்.

இதற்கமையவே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சமூக ஊடகங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரது எதிர்கால வருமானத்தில் 10 வீதத்தை அரசுக்கு அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரஸ்யாவில் உள்ள நீதிமன்றங்களின் பிற தீர்ப்புகளுடன் ஒப்பிடும்போது இந்த தண்டனை எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளதென கருத்து வெளியாகியுள்ளது.

அத்துடன், அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் மன்னிப்புக்கோரும் காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...