3
இலங்கைசெய்திகள்

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

Share

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கான சஜித்தின் தீர்மானம் குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய (Karu Jayasuriya) அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“போருக்குப் பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அரசாங்கம் வட்டமேசை மாநாடு ஒன்றை நடத்த வேண்டும்.

அதேவேளை, சஜித் பிரேமதாசவின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டம் தொடர்பான (Sajith Premadasa) உறுதிமொழியை அடுத்து, அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக தமிழ் குழுக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chndrika Bnadarathunga), மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஜே.வி.பியினரும் (JVP) 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கு ஆதரவளித்துள்ளனர்.

எனவே, இந்த திருத்தம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரது, நிலைப்பாட்டை கட்டியெழுப்ப உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் நாடாளுமன்றத்தையும் வலியுறுத்துகின்றேன்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...