சீனி கொத்தணி உருவாகும் அபாயம்!
நாட்டில் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் பெருமளவில் நீண்டவரிசையில் வியாபார நிலையங்களில் கூடுகின்றனர்.
இதனால் நாட்டில் சீனி கொவிட் கொத்தணி ஏற்படும் அபாய நிலை உள்ளது என அபயராம விகாராதிபதி முருத்தட்டுவே ஆனந்ததேரர் தெரிவித்துள்ளார்.
கொரோனா முதலாம் அலையில் ஆடைத்தொழிற்சாலையில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியதை அடுத்து ஆடைத்தொழிற்சாலை கொவிட் கொத்தணி உருவாகியது.
அதேபோல் தற்போது சீனி கொள்வனவுக்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் ஒன்றுகூடுவதால் சீனி கொவிட் கொத்தணி உருவாக வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment