நாடு முழுவதுமுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில்,
நாட்டில் பரவலாக எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அத்துடன் மின்வெட்டும் அமுலாக்கி வருகிறது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில், நாட்டில் பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இப் பிரச்சினைக்கு அரசு உடனடித் தீர்வை முன்வைக்காவிடின் ஹோட்டல், உணவகம் மற்றும் பேக்கரி துறைகள் முழுவதுமாக பாதிக்க வாய்ப்புக்கள் உள்ளன.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையால், உணவு வாங்குவதில் மக்கள் மிகப்பெரும் சிரமத்தை எதிநோக்கி வருகின்றனர் – என்றார்.
#SriLankaNews
Leave a comment