நாட்டுக்கு அந்நிய செலாவணியை கருத்தில் கொண்டு வாகனங்கனை இறக்குமதி செய்வதற்கான தடையை பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனமத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தற்போது வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட தடைக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் காலங்களில் நீக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையத்தள கூட்டம் ஒன்றிலேயே அஜித் நிவாட் கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனாத் தடுப்பூசி விரைவாக வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதனால் விரைவில் சுற்றுலாத்தறையை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
அதன்படி இறக்குமதிக்கு முக்கிய காரணமாக இருக்கும் தொழிற்சாலைகளை வழமை போல நடத்தி செல்ல முடிந்தால் நாட்டில் மீண்டும் அந்நிய செலாவணி அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment