wimal
அரசியல்இலங்கைசெய்திகள்

கௌரவமாகப் பதவி விலகுங்கள்! – மஹிந்தவிடம் விமல் வலியுறுத்து

Share

“2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். அதனால்தான் மக்கள் அவரை மறுபடியும் ஆதரித்தார்கள். எனவே, மக்கள் விரட்டும்வரை காத்திருக்காமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைத்து நிறைவேற்றிக்கொள்ளும் நடைமுறை என்பது சவாலுக்குரிய விடயமாகும். எனவேதான், புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைத்து, நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். அதற்குப் பிரதமர் பதவி விலக வேண்டும். புதிய பிரதமர் தலைமையில் நாட்டு மக்கள் ஏற்கும் அரசு அமைய வேண்டும்.

இந்த நோக்கில்தான் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினர். அடுத்த சுற்றுப் பேச்சு நடத்தப்படுவதற்குள் எமது அணியில் உள்ள உறுப்பினரை விலைக்கு வாங்கிவிட்டனர். இந்தச் சில்லறைத்தனமான அரசியலை பஸில் ராஜபக்ச தனது சகாக்கள் ஊடாக ஆரம்பித்துள்ளார். ராஜபக்சக்களின் இந்தச் சலூன் கதவு விளையாட்டு எடுபடாது. உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது.

எனவே, சாந்த பண்டாரவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும். அதனைச் செய்தால் நாளை வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தத் தயார். ஆனால் தொடர்ந்து அடம்பிடித்துக்கொண்டிருந்தால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...