4 31
இலங்கைசெய்திகள்

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை தாயகத்தில் குடியமர்த்த திட்டம்! சாணக்கியன் எம்.பி

Share

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை தாயகத்தில் குடியமர்த்த திட்டம்! சாணக்கியன் எம்.பி

வடக்கு – கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை தாயகத்துக்கு அழைத்து மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடித்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Rasamanickam Shanakiyan) தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த சாணக்கியன் எம்.பி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்புவது அவசியமாகும்.

இந்நிலையில், அவர்களை ஒட்டுமொத்தமாக நாட்டுக்கு மீள அழைத்து வரும்போது அவர்களுக்கான அடிப்படைய வசதிகள் உள்ளிட்ட இதர விடயங்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகள் உள்ளமையால் முன்னோடித்திட்டமொன்றை முன்னெடுப்பது பொருத்தமானது.

வடக்கு, கிழக்கில் இருந்து அசாதாரண சூழல்களில் வெளியேறிச் சென்றிருந்த தமிழ் மக்கள் தமிழகத்தில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தங்கியிருக்கின்ற அகதிகள் தாயகம் திரும்புவது அவசியமாகும்.

அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்திய நிலையில், வடக்கு, அல்லது கிழக்கு மாகாணத்தின் குறித்த பகுதியொன்றில் 25 முதல் 30 குடும்பங்களை முதலில் தாயகத்துக்கு வரவழைத்து மீள்குடியேற்றி அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் யோசனைக்கும் சம்மதத்தினை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், விரைவில் முதற்கட்டமாக தமிழகத்திலிருந்து ஒருதொகுதி குடும்பங்கள் அழைத்துவரப்படுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...