யானைகளை பதிவு செய்யும் ´யானை புத்தகம்´ எனும் ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானைகளை பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வௌியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இன்று முதல் 10 நாட்களுக்குள் குறித்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment