நாட்டில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.
அதேவேளை, நாட்டு மக்கள் அமைதியாக போராடிவரும் நிலையில், எதற்காக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது என்பது குறித்து தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் திங்கட்கிழமை, ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் மேற்படி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களும், இராஜதந்திரிகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment