” அமைச்சு பதவியிலிருந்து நபர்களை நீக்குவதால் நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. விமல், கம்மன்பில ஆகியோருக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.” – என்று இராஜாங்க அமைச்சரும், சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களுக்கான விசேட கூட்டமொன்று இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.
” அமைச்சர்களை மாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவர் என்னையும் நீக்கலாம். அந்த அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்தமுடியாது. எனினும், விமல், கம்மன்பிலவை நீக்கியதால் நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? இல்லை.
நாம் அவர்களுக்காக குரல் கொடுப்போம். 11 பங்காளிக்கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும்.” – என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment