image 3cc5338b48
அரசியல்இலங்கைசெய்திகள்

புலிகள் மீதான தடையை நீக்குங்கள்!

Share

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என தாம் இந்தியா சென்றிருந்த வேளை கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு இந்தியா செல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் டில்லியில் பாஜகவின் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்தபோது பல்வேறுபட்ட கோரிக்கையினை நாங்கள் முன்வைத்திருந்தோம்.

அந்த கோரிக்கைகள் அவரால் செவி சாய்க்கப்பட்டதோடு அதற்கு தீர்வுகள் வழங்கப்படும் என நம்புகின்றோம். மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும், தொல்லியல் திணைக்களத்தினால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக பிரச்சனைகளை ஏற்படுத்தப்படுகின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும் , கிழக்கு பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தமிழர்களின் காணிகளை அபகரித்து திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை நிறுத்த வேண்டும்.

தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கின்ற விடுதலைப் புலிகளது ஜனநாயக வழிமுறைகளை ஏற்று அவர்கள் மீதான தடையினை நீக்க வேண்டும். குறிப்பாக தென்னாசிய பிராந்தியத்தில் முக்கிய வல்லரசான இந்தியா புலிகளின் தடை நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம்.

அத்தோடு தமிழர்களுக்கான ஒரு சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கு 87 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையிலே கொண்டுவரப்பட்ட 13 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரினோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...