இலங்கைசெய்திகள்

அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்! – வர்த்தமானியும் ரத்து

0e4ffe5d23715f93a91b56f38191f9cc SmallRRRR
Share

அரசால் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாட்டை  அகற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன் வெளியிடப்பட்ட  அரிசிக்கான அதிகபட்ச மொத்த விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தையில் அரிசிக்கு ‘செயற்கை தட்டுப்பாடு’ ஏற்படாது தடுக்க ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையால் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கீரி சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு சாம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு நாடு மற்றும் வெள்ளை மற்றும் சிவப்பு மூல அரிசி ஆகியவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்கும் வர்த்தமானி கடந்த செப்ரெம்பர் 02 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

எனினும், அதற்கான வர்த்தமானி அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை வெளியிடுவதற்கு மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...