ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

நிதியை விடுவியுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Share

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

இதற்கமைய, தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்ததாக நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி இதுவரை கிடைக்கப்பெறாததால், வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பிரதானி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச்சீட்டுக்களை தபால் நிலையத்திற்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...