Supermarket Prices Trade Goods 02
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Share

செத்தல் மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (26) முதல் அமுலாகும் வகையில் குறைக்கவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் குறைக்கப்பட்ட விலைகளில் 6 பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியுமென சதொச அறிவித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாயின் விலை 30 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,700 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் வெள்ளை பச்சை அரிசி 10 ரூபாய் குறைக்கப்பட்டு 169 ரூபாக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 8 ரூபா குறைக்கப்பட்டு 179 ரூபாய்க்கும்  ஒரு கிலோகிராம் வௌ்ளை நாடு (உள்நாடு) 5 ரூபாய் குறைக்கப்பட்டு 184 ரூபாக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச அறிவித்துள்ளது.

மேலும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு மற்றும் கீரி சம்பா ஆகியவை தலா 5 ரூபாயால் குறைப்பட்டு முறையே 365 மற்றும் 235 ரூபாகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....