பெருந்தொகை கஞ்சா யாழில் மீட்பு!

image 0e76d16df0

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா, யாழ். குருநகர்ப் பகுதியில் கடற்படையால் வியாழக்கிழமை (15) கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைப் படகில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவே கடலில் வைத்து கைப்பற்றப்பட்டது.

இதன்போது கஞ்சாவை எடுத்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சாவை கடத்தி வந்தவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version